தகவல்

Ask Three Questions, ஓர் உறவுக்குள் வலுக்கட்டாயத்தையும் கட்டுப்படுத்தும் போக்கையும் அடையாளம் காண்பதற்கான ஒரு புதிய அணுகுமுறை.

பங்கேற்பாளர் தகவல்கள்

Ask Three Questions என்ற எங்கள் ஆராய்ச்சி ஆய்வில் பங்கேற்க உங்களை அழைக்கிறோம். பங்கேற்பது சொந்த விருப்பத்திற்குரியது, நீங்கள் பங்கேற்றால் உங்களை அடையாளம் காட்ட முடியாது. நீங்கள் பங்கேற்க ஒப்புக்கொண்டால், 12 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

ஆய்வைப் பற்றி

இந்த ஆய்வு, ஓர் உடல் சாராத உறவில் தொடக்கத்தில் ஏற்படும் வலுக்கட்டாயத்தையும் கட்டுப்படுத்தும் போக்கையும் பற்றியது. இது பல சமயங்களில் உடல் ரீதியான துன்புறுத்தலை விளைவிக்கிறது என்பதால் இது முக்கியமானது. நாங்கள் தற்போது உறவில் இருக்கும் 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதான பங்கேற்பாளர்களை நாடுகிறோம். ஆராய்ச்சியில் பங்கேற்க உங்களுக்குத் தோராயமாக 5 நிமிடங்கள் செலவாகும்.

ஆராய்ச்சியின் நோக்கம்

Ask Three Questions கருவியைச் செல்லுபடியாக்குவதே இந்த ஆராய்ச்சியின் நோக்கம்.

நான் ஏன் அழைக்கப்பட்டுள்ளேன்?

உறவில் இருக்கும் பங்கேற்பாளர்களைச் சேர்ப்பதுதான் இலக்கு.

நான் பங்கேற்றாக வேண்டுமா?

பங்கேற்பது முற்றிலும் சொந்த விருப்பத்திற்குரியது, பங்கேற்பதா வேண்டாமா என்று நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும். நீங்கள் பங்கேற்க ஒப்புக்கொண்டால் மின்னணு ரீதியாக ஒப்புதல் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுவீர்கள். உங்கள் தரவு சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பு உலாவியின் tab-ஐ மூடி, காரணம் எதுவும் சொல்லாமல் நீங்கள் விலகிக்கொள்ளலாம்.

பங்கேற்றால் எனக்கு என்ன ஆகும்?

நீங்கள் பங்கேற்க ஒப்புக்கொண்டால், 12 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

செலவுகள் மற்றும் பணச்செலுத்தங்கள்

நீங்கள் நேரம் செலவழிப்பதற்கு இழப்பீடு எதுவும் தரப்படாது.

என்ன தரவுகள் சேகரிக்கப்படும்?

நாங்கள் உங்கள் உறவைப் பற்றிய கேள்வி-பதில்களை ரகசியக்காப்போடும் அநாமதேயமாகவும் சேகரிப்போம்.

பங்கேற்பதில் ஏற்படச் சாத்தியமுள்ள பாதகங்கள் யாவை?

சில கேள்விகள் உங்களுக்கு மன வருத்தம் அளிக்கலாம். இருந்தாலும், பதிலளிக்க விரும்பவில்லை என்றால் நீங்கள் ‘சொல்ல விரும்பவில்லை’ என்ற விருப்பத் தேர்வைத் தேர்ந்தெடுக்கலாம்.

பங்கேற்பதில் கிடைக்கச் சாத்தியமுள்ள பலன்கள் யாவை?

பங்கேற்பதில் உங்களுக்குத் தனிப்பட்ட நேரடிப் பலன்கள் எவையும் கிடைக்காதிருக்கலாம், ஆனால் தங்கள் உறவில் வலுக்கட்டாயத்திற்கும் கட்டுப்பாட்டுக்கும் உள்ளாகியிருப்பவர்கள் இந்தப் பணியின் முடிவுகளால் பலனடையலாம்.

எனது தரவுகள் ரகசியக்காப்புடன் வைத்திருக்கப்படுமா?

தனிப்பட்ட தரவுகள் எவையும் சேகரிக்கப்படாது. தரவுகள் Keele University திறந்த தரவுத் தக்கவைப்புக் கொள்கைப்படி (Keele University Open Data Retention Policy) பாதுகாப்பாகச் சேமித்துவைக்கப்படும். உங்களை அடையாளம் காட்டாத அநாமதேயத் தரவுகள், இந்தச் செயல்திட்டத்தின் முடிவில் பகிரங்கமாகப் பகிரப்பட்டு அவற்றுக்குத் திறந்த அணுகல் வழங்கப்படும்.

நான் இந்த ஆய்வில் தொடர விரும்பவில்லை என்றால் என்ன ஆகும்?

நீங்கள் உலாவியின் tab-ஐ மூடி உங்கள் பங்கேற்பை நிறுத்திக்கொள்ளலாம். தரவுகள் அநாமதேயமாகச் சமர்ப்பிக்கப்படுவதால், உங்கள் தரவுகளைச் சமர்ப்பித்த பின்பு அவற்றைத் திரும்பப் பெறுவது சாத்தியமல்ல என்பதை தயவுசெய்து கருத்தில் கொள்ளுங்கள்.

ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் என்ன செய்வது?

இந்த ஆய்வு பற்றி உங்களுக்கு ஏதேனும் கேள்வி, கவலை அல்லது புகார் இருந்தால், நீங்கள் ஆராய்ச்சியாளர்களை AskThreeQ@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குப் பொருள் பகுதியை (subject line) காலியாக விட்டு ரகசியக்காப்புடன் தொடர்பு கொள்ள வேண்டும். மின்னஞ்சல் வழியாக வெளிப்படுத்தப்படும் தகவல்கள் நுண்ணுணர்வுடன் கையாளப்படும்.

உங்கள் கவலைக்கு அல்லது புகாருக்கு ஆராய்ச்சிக் குழுவால் தீர்வு காணப்படவில்லை என்றால், நீங்கள் FMHS ஆராய்ச்சி அறக் குழுவை (Research Ethics Committee) health.ethics@keele.ac.uk என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டும்

இந்த ஆராய்ச்சிக்கு நிதியளிப்பது யார்?

இந்த ஆய்வுக்கு உலகளாவிய உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்காக Keele University (Keele University Institute for Global Health and Wellbeing)

இந்த ஆய்வை யார் மீளாய்வு செய்திருக்கிறார்கள்?

பங்கேற்பாளர்களின் கண்ணியமும் நல்வாழ்வும் மதிக்கப்படுவதை உறுதிப்படுத்த, மனிதப் பங்கேற்பாளர்களைக் கொண்ட ஆராய்ச்சிகளை ஓர் அறக் குழு மீளாய்வு செய்கிறது. இந்த ஆய்வு Keele University FMHS கல்விப்பிரிவு ஆராய்ச்சி அறக் குழுவின் சாதகமான அறக் கருத்தைப் பெற்றுள்ளது.